www.babisan2013.com

Home » photos » babi » குழந்தைகளின் பேசும் கலை வளர்க்க..

குழந்தைகளின் பேசும் கலை வளர்க்க..

respect 1நண்பர்களே.. நாம் மற்றவர்களிடம் பேசிப் பழகும் விதம்தான் நம் வாழ்க்கையின் வெற்றிக்கு உறுதுணையாக அமைகிறது. அது மட்டுமல்ல பழகும் விதம் புத்திசாலித்தனமாக கூட மதிக்கப்படுகிறது. ஆனால் எதிர்த்து பேசுவது, விவாதம் செய்வது,மரியாதையில்லாமல் பேசுவது, அலட்சியமாக பேசுவது என குழந்தைகள் தங்களிடம் பேசும் விதம் குறித்து பெரும்பாலான பெற்றோர்கள் வருத்தப்படு வதுண்டு. அந்த வருத்தத் திற்கு தீர்வு காணுவது எப்படி ஒரு அலசல்.குழந்தைகள், பெற்றோர்கள் செய்யும் பல செயல்களை தாங்களும் செய்கிறார்கள்.சிறு குழந்தையாக இருக்கும்போது பெற்றோர்கள் பேசியதைக் கேட்டுத்தான் பேசக்கற்றுக்கொள்கிறார்கள். இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது பேசும் வார்த்தைகளைமட்டுமல்ல.. பேசும்விதத்தையும் உங்களிடம் இருந்துதான் கற்கிறார்கள்.உங்கள் குழந்தைகள் மரியாதையாக பேச வேண்டும் என்றால் நீங்கள் அவர்களை மரியாதையாக நடத்துங்கள். மரியாதையாக பேசுங்கள்.என்ன குழந்தைகளைப் போய் மரியாதையாக பேசுவதா ? என்று நினைக்க வேண்டாம்.

 நம் குழந்தையை நாமே மதிக்காவிட்டால் நாளை மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள். நீங்கள் உங்கள் குழந்தையை மதித்தால் உங்கள் குழந்தை தன்னையே மதிக்கத் துவங்கும். பிறகுமற்றவர்களையும் மதிக்கும். மற்றவர்களை மதித்தால்தான் பேசும்விதமும் மரியாதையாக இருக்கும்.குழந்தைகள் கோபமாக பேசினால் பதிலுக்கு நீங்களும் உணர்ச்சிவசப்பட்டுதிட்டாமல், ‘கத்தாதே’ என்று ஒரே வார்த்தையில் அவர்களை அடக்காமல், அவர்கள் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். உணர்ச்சியை வெளிப்படுத்தாதே என்பதற்கு பதில் உணர்ச்சி வசப்படாதே என்று சொல்லிக்கொடுங்கள்.

நாம் கோபப்படுவதும், திட்டுவதும் நமக்கு தவறாகத் தெரிவதில்லை. ஆனால்நம்மைப்பார்த்து குழந்தைகள் அதுபோல நடந்து கொள்ளும்போது நமக்கு தவறாகத்தெரிகிறது. ‘முளச்சு மூணு இலை விடல,உனக்கு இவ்வளவு கோபம் வருதே’ என்று ஆரம்பித்து சொல்லக்கூடாத வார்த்தைகளை எல்லாம் சொல்லி நம் கோபத்தை கொட்டி தீர்த்து விடுகிறோம். வயதில் பெரியவர்கள் என்பது கோபப்படுவதற்கும் கடுமையான சொற்களை சொல்வதற்கும் ஒரு தகுதியல்ல…. வயதின் முதிர்ச்சியை நீங்கள் பக்குவமாக நடந்து கொண்டு காட்ட வேண்டுமே தவிர கோபப்பட்டு அல்ல.

அடிக்கடி கேட்கிற வார்த்தைகளைதான் குழந்தைகளும் பயன்படுத்த துவங்குகிறார்கள்.‘இப்பவே கண்ண கட்டுதே ! ” டயலாக் எல்லா வீடுகளிலும் ஒலிப்பதற்கு இதுதான் காரணம். நீங்கள் கிண்டலான வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தினால் உங்கள் குழந்தைகளும் அதை பயன்படுத்துவார்கள். குழந்தைகளின் பேசும் விதத்தை மாற்ற வேண்டும் என்றால் குழந்தைகளிடம் நீங்கள் எப்படி பேசுகிறீர்கள் என்பதை கவனியுங்கள். குழந்தைகள் எப்படி இனிமையாக பேச வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அது போல நீங்கள் இனிமையாக பேசுங்கள். நிச்சயம் குழந்தைகளும் பின்பற்றுவார்கள்.

 வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் குழந்தைகள் நன்றாகப் பேசுவதில்லை என்ற வருத்தம் ஓவ்வொருவரையும் ஆட்டிப்படைக்கிறது.எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றை கூறுகிறேன்.பால்ய கால நண்பர் ஒருவரது வீட்டிற்க்கு செல்ல நேர்ந்த்து.நான் அங்கு செல்கையில் நண்பரும் அவரது மகனும்டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.என்னைக் கண்டதும் அவரது பையன் எதுவும் பேசாமல் டிவியை அணைத்துவிட்டு அவன் அறைக்குள் மறைந்தான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த என் நண்பருக்கு மிகவும்தர்ம சங்கடமாகப் போய்விட்டது. இப்படியா விருந்தினரை அலட்சியம் செய்வது என்று வருத்தத்தோடு போய் மகனிடம் கோபமாக, ‘ஏன் வந்திருக்கிறவங்ககிட்ட இரண்டு வார்த்தை பேசினா குறைஞ்சா போயிடுவ. வந்து என்னன்னு கேட்டுட்டு போ’ என்று சொல்லியிருக்கிறார்.

அவரது பையனும் அதே கோபத்தோடே என்னிடம் வந்து ‘என்ன?’ என்றான். எனக்குஒன்றுமே புரியவில்லை. திடீரென்று பையன் வந்து கோபமாக ‘என்ன’ என்றால் எனக்குஎன்ன புரியும் ?. இருந்தாலும் மரியாதை கருதி ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டேன்..இதை ஏன் சொல்கிறேன் என்றால் குழந்தைகளிடம் மரியாதையாக பேசுவதை ஒரு சடங்காக்க நினைத்தால்  இதுபோன்ற விபரீதங்கள் நிச்சயமாய் நிகழலாம். எனவே மரியாதையாக பேசுகிற பழக்கத்தை விட மற்றவர்களை மதிக்கின்ற உணர்வை வளர்த்தாலே போதும். பேச்சில் மரியாதை தானாக வெளிப்படும்.

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s