www.babisan2013.com

Home » photos » babi » ஆலய பரிபாலன சபையினால் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கலும், கல்வி நிலயம் திறந்து வைத்தல் நிகழ்வும்

ஆலய பரிபாலன சபையினால் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கலும், கல்வி நிலயம் திறந்து வைத்தல் நிகழ்வும்

Advertisements

SAM_7313வறுமைக்கோட்டிற்கு  உட்பட்டமாணவர்களுக்கான கல்வி முன்னேற்றம் மற் றும் அபிவிருத்தி கருதி முதற்கட்டமாக 08 மாணவர்களுக்கு மாதாந்தம் 1000 ரூபா வீதம் அவர்களின் கல்விச் செலவுகளை ஈடு செய்தும் வகையில் கல்லடி பேச்சி அம்மன், சித்திவிநாயகர், நாகதம்பிரான் ஆலய பரிபாலன சபையினரால் நிகழ்வு ஓன்று அவ்வாலய முன்றலில் 24.05.2013 அன்று பி. ப 1.00 மணிக்கு ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவ ட்ட  உதவி மாவட்டச் செயலாளர் திரு V . வாசுதேவன் அவர்களும் ,

 மாவட்ட செயலகம் சார்பாக சிறுவர் மேம்பாட்டு இணைப்பாளர் என்ற நானும் பங்கு பற்றியிருந்தேன். அத்துடன் மட். விவேகானந்த மகளிர் வித்யாலய அதிபர் அவர்களும் பொதுமக்களும் சிறார்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்த வகையில் ஆலய பூசைகள் யாவும் நிறை பெற்றதன் பின்னர் அம்முன்றலிலேயே பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்கள் ஆலய பரிபாலன சபையினர்ராலும் கலந்து கொண்ட அதிதிகளாலும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வு திடர்பில் திரு வாசுதேவன் அவர்கள் உரையாற்றுகையில் சமுக்கத்துக்கும் கோவிலுக்கும் உள்ள ஒரு நல்லதொரு இணைப்பை பலப்படுத்துவதற்கும் மேலும் சமூகத்துக்கு உள்ள பொறுப்புணர்வை எல்லாரும் மெச்சும் அளவிற்கு இவ்வாறான ஒரு நிகழ்வு இன்றுஅமைந்திருக்கின்றது எனவும் இப்பணி போற்றத்தக்கதோடு வரவேட்கத்தக்குமாகும் எனக் கேட்டு இது தொடர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அது போன்று விவேகானந்தா அதிபர் அவர்கள் குறிப்பிடுகையில் இவ்விடயம் தனது வெகு நாள் கனவு எனவும் அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் என்பதை விடவும் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் பெரும் புண்ணியம் என்னும் தொனி பட இவ்வாறனதொரு புண்ணிய காரியத்தை ஆலயம் செய்திருப்பது ஒரு பொன்னெழுதுக்களால் பொறிக்கப்பட வேண்டியதருணம் இது எனக் குறிப்பிட்டார்

மாவட்ட சிறுவர் மேம்பாட்டு இணைப்பாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் இன்றைய காலத்தில் வறுமை காரணமாக தமது கல்வியை தொடர முடியாது பல பிள்ளைகள் பெரும் சிரமத்தினை எதிர் நோக்குகின்றனர் இதன் காரணமாக பாடசாலை இடைவிலகல்களும் ஏற்படுகின்றன. அரசு அவ்வாறான மாணவர்களை கவனம் செலுத்தி உதவிகள் மற்றும் ஆதரவு வழங்குவதுபோல ஆலயமும் செய்திருப்பது சமூகத்துக்கு பிள்ளைகள் மேல் இருக்கும் பொறுப்பையும் அக்கறையினையும் காட்டி நிற்கின்றது என்பதோடு இப்பிள்ளைகள் பல்கலைகழகம் செல்லும் வரையும் இவ்வுதவி வழங்கப்பட இருப்பதனால் அந்த இலட்சியம் நோக்கிய பணத்தை சரியாக செய்து முடிக்க வேண்டிய பொறுப்பும் , கடப்பாடும் பிள்ளைகளுக்கு உள்ளது எனவும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து இந்நிகழ்வின் நிறைவில் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்காக அம்மன் கல்வி அகம் என்னும் பேரில் ஆலய பரிபாலன சபையினரால் நிர்வகிக்கும் வகையில் இலவசமாக கல்வி கற்பதற்கென பிரத்தியேக கல்வி நிலையம் ஒன்றும் மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் திரு V . வாசுதேவன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.01SAM_7317 SAM_7307 SAM_7309 SAM_7311 SAM_7316

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s