www.babisan2013.com

Home » photos » babi » மண்முனை பற்று DMC கூட்டம் – 20.05.2013

மண்முனை பற்று DMC கூட்டம் – 20.05.2013

photo (2)மண்முனை பற்று பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புக் குழுக் கூட்டமானது 20.05.2013 இன்று மு.ப. 10.00 மணிக்கு இடம்பெற்றது. இக்கூட்டமானது  பிர தேச செயலாளர் திருமதி வ. அருள்ராஜா அவர்களின் தலைமையில் இடம் பெற்றதுடன். இதில் பிரிவு கோட்டக்கல்வி அதிகாரி, சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர், கிராம உத்தியோகத்தர்கள், உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு A . கிருபராஜா, மாவட்ட இணைப்பாளர் திரு வீ. குகதாசன் மற்றும்

netcafe நடத்துனர்கள், tution centre நடத்துனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கடந்த கூட்டங்களில் சிறுவர் நலன் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது. இதில் பிரத்தியேக கல்வி நிலையங்களில் கடைப்பிடிக்க வேண்டிய தராதரங்கள் குறித்து ஆராயப்பட்டது அவற்றில்

01. போயா தினங்களில் பிரத்தியேக வகுப்புக்களை நடத்தாமை
02. ஞாயிற்றுக் கிழமைகளில் 2.00 மணிக்கு பின்னர் வகுப்புக்களை
நடத்துதல்
03. அந்நிலையங்களில் பதிவேடுகளை பேணல்
04. இரவு நேர குழு வகுப்புக்களை 7. 00 மணிக்குள் நடத்தி
முடித்தல் ( பெற்றோரின் சம்மதத்துடன்)
05. 03 மதங்களுக்கு ஒரு தடவை பிரதேச செயலாளருக்கு
அறிக்கை செய்தல்

06. நிலையங்களின் உள் , வெளி சுற்றாடலை சுத்தமாக
வைத்திருத்தல்

போன்ற முக்கிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன் இவைகளை நடைமுறைப்படுத்துவதாக நடத்துனர்களும் ஏற்றுக் கொண்டனர்.

Netcafe தொடர்பாக கலந்துரயாடப்பட்டத்தில்

01. அந்நிலையங்களில் பதிவேடுகளை பேணல்
02. பாடசாலை நேரங்களில் 18 வயதுக்கு உட்பட்டவர்களை
அனுமதிக்காமை
03. தகாத இணையத்தளங்களை பார்வையிடுவதை
தடுப்பதற்கான பொருத்தமான முறை ஒன்ற கையாளுதல்

போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டு தீர்மானம் மேட்கொள்ளப்பட்டது.

அத்துடன் பிரதேச மட்டத்தில் பாடசாலை சிறார்களின் பிரச்சனைகளை கண்காணிப்பதற்கென கோட்டக்கல்வி அதிகாரி CRPO , PHI , மற்றும் அரச சார்பற்ற நிறுவன பிரதி நிதி என உத்தியோகததர்களை உள்ளடக்கிய குழு மூலம் பாடசாலைகளில் வலயக் கல்விப் பணிப்பாளரின் உதவியுடன் கண்காணிப்பை மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

photo (3) photo photo (1)


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s