www.babisan2013.com

Home » photos » babi » பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் பிரதேச மட்ட பணிக்குழு கூட்டம் – 17.05.2013

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் பிரதேச மட்ட பணிக்குழு கூட்டம் – 17.05.2013

how-domestic-violence-affects-childrenபெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் பிரதேச மட்ட பணிக்குழு கூட்டம் – 17.05.2013 இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு S . கிரிதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் அப்பிரிவு பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் இக்கூட்டத்தை ஒழுங்கமைத்திருந்தார். இந்த வகையில் இக்குழுவின் நோக்கம் குறித்து பிரதேச செயலாளர் அவர்கள் குறிப்பிடுகையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்ற விடயத்தை சாதாரணமாக பார்த்து விட முடியாது அது எமது பிரதேச ,மாவட்ட ,நாட்டின் அபிவிருத்தியிலும் கூட செல்வாக்கு செலுத்தலாம் எனவே அவை குறித்து மக்கள் மத்தியில் போதுமான விழிப்பு ஏற்படுத்தப்பட வேண்டி உள்ளதுடன், பிரதேச கிராம மட்டங்களிலும் இக்குழுக்களை அல்லது அதற்கான பொறிமுறையை வலுப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து கூட்டமானது பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு S . சிவராசா அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது . அவர் குறிப்பிடுகையில் குழுவின் செயற்பாடுகள் இது எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து ஒரு திறந்த கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதுடன் . இக்குழுவில் அங்கம் வஹிக்கும் உத்தியோகத்தர்களில் பலர் சமூகம் தராத காரணத்தினால். அவர்கள் அனைவரையும் இணைத்து மீண்டும் ஒரு தடவை கூட வேண்டிய நிலை உள்ளது எனவும் குறிப்பிட்டார், அத்துடன் மட்டக்களப்பில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைத்தடுக்கும் பணியகத்தில் கடமையாற்றும் பிரதிநிதி அவர்கள் கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பில் பெரும்ம்பாலும் பெண்களுக்கு எதிரான குடும்ப முரண்பாடுகள் அதிகரித்து காணப்படுவதாகவும் அவைகளை தடுப்பதற்கு கிராம் மட்டங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் கேட்டுக் கொண்டார்.

மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் பிரதேச மட்ட பணிக்குழு சூரிய பெண்கள் அபிவிருத்தி நிலையம் Focal Agency யாக காணப்படுவதனால இக்குழுவின் இயலுமையினை கட்டி எழுப்புவதற்கான உதவிகளை வழங்க முடியும் என அவ்வமைப்பு சார்பாக கலந்து கொண்ட பிரதி நிதிகள் தெரிவித்தனர்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s