www.babisan2013.com

Home » photos » babi » வண்ணத்து பூச்சி பூங்காவினரின் சிறுவர்களுக்கான வருடாந்த நிகழ்வு – 12.05.2013

வண்ணத்து பூச்சி பூங்காவினரின் சிறுவர்களுக்கான வருடாந்த நிகழ்வு – 12.05.2013

05வண்ணத்து பூச்சி பூங்காவினரின் சிறுவர்களுக்கான வருடாந்த நிகழ்வு 12.05.2013 அன்று பி ப. 4.30 மணிக்கு திருபெருந்துறை ஸ்ரீமுருகன் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. முழுக்க முழுக்க பிள்ளைகளினால் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் பூங்காவின் இயக்குனர் அருட்தந்தை போல் சட்குணநாயகம் அவர்கள் தலைமை தங்கினார். அத்துடன் அதிதிகளாக ஸ்ரீமுருகன் வித்தியாலய அதிபர், அப்பிரிவு கிராம சேவை உத்தியோகத்தர், பிரிவு போலீஸ் பொறுப்பதிகாரி, பாலர் பாடசாலை ஆசிரியர்கள், சமூக மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதகள், ஊர் மக்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன் . நானும் (வீ. குகதாசன் ) பிரதம அதிதியாக கலந்து கொண்டேன்.

நிகழ்வில் அருட்தந்தை போல் சற்குணநாயகம் அவர்கள் உரையாற்றுகையில் பிள்ளைகள் தமது அறிவு திறமைகளைக் கொண்டு தாம் வேண்டும் உலகம் என்ன என்பதை தொனிப்பொருளாக கொண்டு பல நிகழ்வுகளை தாங்களே சுயமாக உருவாக்கி உள்ளனர் என்றும் அந்த சின்னன் சிறார்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் எனவும் பெரும்பாலும் பில்லைகளுக்கான் துஸ்பிரயோகங்களில் 40 வீதமானவை பாலியல் துஸ்பிரயோகங்காளாக குடும்பங்களிலேயே இடம் பெறுகின்றன எனவும் எவைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் பிள்ளைகள் கதைக்கு அபிநயம் என்ற ஒரு நிகழ்வினை நிகழ்த்தினர் , தொடர்ந்து பாடல்கள், நடனம், பழங்காலத்து பெரியோர்களின் வளர்ப்பு முறை என்ற பாடல் போன்ற நிகழ்வுகள் மூலமாக தமது சுதந்திரம், உணர்வுகள், கருத்துக்கள் மதிக்கப்பட வேண்டும் எனவும் அறிவு, திறமைகள் ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் அவைகளுக்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்படவேண்டும் என்பதனை சுட்டிக் காட்டுவதாக அந்நிகழ்வுகள் அமைந்திருந்தன.

அத்துடன் பிரதம அதி என்ற வகையில் எனதுரையில் பிள்ளைகளுக்கான துஸ்பிரயோகம் தொடர்பில் ஒருசில வார்த்தைகள் பேசினேன். பிள்ளைகளுக்கான பாதுகாப்புக்கு முதல் பொறுப்பு சொல்லக் கூடியவர்கள், பெற்றோரே அந்த வகையில் பிள்ளைகளுக்காக இடம் பெறுகின்ற துஸ்பிரயோகங்கள் எல்லைப்ப் பிள்ளைகளுக்கும் இடம்பெறுகின்றதா எல்லா நபர்களாலும் இடம்பெறுகின்றதா என்பது குறித்து சிந்தித்து பார்க்க வேண்டி உள்ளது. எனவே எவ்வாறான நபர்கள் என்பதில்

போதைப் பொருள் பாவனையாளர்கள்,
நல்லெண்ணம் அற்றவர்கள்,
நேர்நிலையாக சிந்திக்க முடியாதவர்கள்
அசாதாரண நடத்தை கொண்டவர்கள்
எந்நேரமும் கோபப்படுபவர்கள்

போன்ற பல்வேறு நடத்தை கொண்ட நபர்கள் மூலமாகவே துஸ்பிரயோகங்கள் ஏற்படுகின்றன எனவும் அவ்வாறானவர்க பெற்றோராகவும் இருக்கலாம் எனவே அவ்வாரனவர்களிடம் இருந்து பிள்ளைகள் விலகி இருக்க வேண்டும் எனவும் அவ்வாறான நபர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ள முடிந்தது.

04 01 02 03

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s