www.babisan2013.com

Home » photos » babi » பாலியல் வல்லுறவு இடம்பெறக் காரணம் என்ன?

பாலியல் வல்லுறவு இடம்பெறக் காரணம் என்ன?

Advertisements

images (1)இன்றைய கால கட்டத்தில் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில், நாட்டில் அடுத்தடுத்து அரங்கேற்றி வரும் கற்பழிப்புகளால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது மேற்கத்திய கலாசாரம் பல தரப்பினரையும் ஆட்டிப் படைத்து வருகிறது. இதன் காரணமாக ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு சில சமூக அக்கறையற்ற சக்திகளால் சீர்குலைக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டு தோறும் கற்பழிப்பு மற்றும் பாலியல் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு இருபது நிமிட நேரத்தில் ஒரு பெண் தன் கற்பை இழந்து கொண்டு இருக்கிறாள் என்கிறது கணக்கெடுப்பு..!

இந்த கலாச்சார சீரழிவிற்கு சினிமாவும், டி.வி. தொடர்களும் பெரும்  காரணமாக அமைகின்றன. நல்ல விஷயங்களை கொண்ட சினிமாக்களும், டி.வி. தொடர்களும் மிக குறைவாக வந்தாலும், வன்முறை பலாத்காரம் , வக்கிரங்கள், கள்ளக்காதல் விஷயங்கள், சமூக ஒழுங்கீனங்களை சித்தரிக்கும் சினிமாக்களும், டி.வி. தொடர்களும் அதிகளவில் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அத்துடன் மது கடைகளின் படை எடுப்பும் சேர்ந்து இரட்டை குழல் துப்பாக்கியாய் இந்த பெண்களின் கற்பை கொன்று குவிக்கிறது.

 
பாலியல் தொழிலை சட்டரீதியாக்கினால் வன்புணர்வு சிறிதளவு குறையுமே தவிர முற்றிலுமாக ஒழித்து விட முடியாது. மற்ற நகரங்களை ஒப்பிடும்போது மும்பை, கல்கத்தா நகரங்களில் பாலியல் தொழில் அனுமதிக்க பட்டு இருப்பதால் வன்புணர்வு வழக்குகள் குறைவு. ஆனால் இந்த பாலியல் தொழிலில் ஈடுபடுவோருக்கு பல கொடிய நோய்களுக்கு ஆளாகி விடுகின்றனர். அதுவும் இந்த தொழில் வருபவர்கள் வஞ்சிக்கப்பட்ட பெண்களே அதிகம் என்பதால் சமுதாய அக்கறையை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. 
 
பெண்கள்  பாதுகாப்பாக வளர்க்க பட்டாலும்  பல சூழ்நிலைகளில் அவளால் தன்னை காப்பாற்றி கொள்ள முடிவதில்லை. அதற்கு பெண் காவலர்கள் கற்பை இழப்பதே சாட்சி. 
 
படிக்கும் காலத்தில் மனகட்டுபாடு கற்பிக்கபடுதல் வேண்டும். அதன் மூலம் வளரும் சமுதாயம் ஓரளவு சரி செய்யபடலாம். அந்த கட்டுப்பாடு என்பது பெண்கள் இது போன்ற சூழ்நிலைகளில் தன்னை தற்காத்து கொள்வது எப்படி என்பதையும் கற்பித்தல் வேண்டும்.
 
பெண் தானே விரும்பி நடைபெறும் சம்பவங்கள் வன்புணர்வாக எப்போது மாறுகிறது என்றால் இன்னொருவன் செவியுரும் போது இவளை அடைய  எண்ணி தொடர்பு கொள்வான். இவள் மறுக்கும் போது அங்கு வன்புணர்வு அரங்கேறுகிறது.  இந்த  வன்புணர்வுக்கு இந்த பெண்ணே காரணமாகிறாள். அதனால் இதுவும் குற்றமே..!
 
காதலிக்கப்பட்டு மட்டுமல்ல திருமணம் செய்து ஏமாற்றப்பட்டு பின் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் நிலைமைதான் பரிதாபத்துக்குரியது. காதலிக்கும் போது ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதற்காக நிறைய பொய்களை அவிழ்த்து விடுவார்கள். ஆனால் அதே காதலர்கள் இல்லற வாழ்க்கையில் புகுந்தால் சுயரூபம் ஒவ்வொன்றாக வெளிப்படும். 
 
பெற்றோரையும், சமுதாயத்தையும் எதிர்த்து காதலித்து திருமணம் செய்தபின் ஏமாறும் பெண்கள் திரும்பி பார்த்தால் வெட்டவெளிதான் தெரியும். அவர்கள் முன் தெரிவது இரண்டே பாதைதான். ஒன்று மரணம் மற்றொன்று பாலியல் தொழில் செய்து மீதி காலம் வாழ்வது.
 
மரணத்துக்கு பயந்தவர்கள் பாலியல் தொழில் செய்து வாழ்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை இரண்டுமே மரணம்தான். இதற்கு ஆண் சமுதாயம்தான் முழு பொறுப்பு.  
 
காதல் என்ற பெயரில் கற்பழிப்புகள் நடைபெறுவதை பொறுத்தவரை 
காதலியுங்கள் ஆனால் திருமணம் வரை கற்பை பாதுகாத்து கொள்ள வேண்டியது பெண்களின் கடமை. காதலனுக்கு கற்பு கண்டிப்பாய் வேண்டும் என்று கேட்டால் காதலனை வேண்டாம் என்று ஒதுக்கி விடவேண்டும். பெண்கள் பருவ கோளாறினால் தன்னை இழந்தார்கள் என்றால் இறுதியில் காதலையும் கற்பையும் இழந்து நிற்பதை நம்மால் பார்க்க முடிகிறது. 
 
சின்னத்திரையின் படையெடுப்பும் சினிமாவின் காட்சிகளும் மது கடைகளின் பெருக்கமும்தான் தற்போதைய சமுதாய சீரழிவிற்கு முழு முதற் காரணம் என்பதே எனது கருத்து. 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s