www.babisan2013.com

Home » photos » babi » இளைஞர்களும் அவர்களின் சமூக அக்கறையும்

இளைஞர்களும் அவர்களின் சமூக அக்கறையும்

Advertisements

youth“வாழ்வதற்கு பொருள் வேண்டும் வாழ்ந்ததற்கும் பொருள் வேண்டும்”.இளைஞர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.அதில் முதன்மையாக அவர்களின் பொருளாதாரம் இரண்டாவதாக குடும்பம்.மூன்றாவதாக அவர்களின் மூளையை மழுங்கச் செய்து ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அவர்கள் வாழ்க்கையை முறையை அமைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தும் ஆடம்பரம் மற்றும் உழைத்த களைப்பை போக்கும் என்று சொல்லக்கூடிய தன்னிலையை மறக்கச் செய்யும் பொழுது போக்கு.பொருள் மட்டுமே வாழ்க்கை என்று ஒரு தலைமுறை இளைஞர்கள் தவறாக வழிகாட்டப்பட்டு முன்னில் பாதியை விட்டு விட்டு வாழ்வதற்கு பொருள் வேண்டும் என்று வார்த்தெடுக்கப்பட்டனர்.

 
 அவ்வாறாக வளர்ந்த இளைஞர்கள் அடுத்த தலைமுறைக்கு சொல்லித்தந்த பாடம், “தான் வாழ பிறரை அழிக்கவும் தயங்காதே” என்றும் அது தவறில்லை என்பதற்கு இது தான் நியதி என்றும் எலி பிறர் பொருளை திருடித்தான் வலையில் சேர்க்கின்றது பாம்பு எலியைக் கொன்றுதான் உயிர் வாழ்கிறது இது போன்று ஒவ்வொரு உயிரினமும் ஒன்றை அளித்து தான் ஒன்று உருவாகிறது இதுதான் இயற்க்கை என்றும் தவறில்லை என்றும் போதித்தார்கள்.இப்படி வளர்க்கப்பட்ட இளைஞர்கள் எப்படியும் பொருள் சேர்க்கலாம் என்ற நிலைக்கு வரப்பெற்றார்கள்.
 
 உழைத்து சேர்த்த பொருளை யாருக்கும் செலவிடாமல் சேர்த்து வைக்கத் தெரிந்த தலைமுறை அதை என்ன செய்வது என்று  தெரியாமல் இருந்த பொழுது தான் மேலை நாட்டு கலாச்சாரம் நம் இளைஞர்கள் மனதில் ஊடுருவ ஆரம்பித்தது. சம்பாதித்த பொருளை தானே அனுபவிக்க வேண்டும் என்ற மனதுடன் கூடிய மனிதாபிமானம்  இல்லா இளைஞர்கள் உருவாக்கப் பட்டனர்.
 
ஆடம்பரமாக சுயநலத்துடன்  வாழ்க்கை வாழ்ந்த இளைஞர்கள் தங்கள் சேமிப்பை இழந்தார்கள். அவர்கள் தம் ஆடம்பரம் தொடர உலகமயமாக்களின் விளைவாக வெளி நாட்டு மற்றும் உள்நாட்டு தனியார் வங்கிகள் செயல்பட துவங்கியது. வங்கிகள் பணம் காய்க்கும் மரங்களான இளைஞர்களைக் குறிவைத்து ஆடம்பர வாழ்க்கை வாழ  வங்கிக் கடன் அட்டைகள் மூலம் தாராளமாக கடன் வழங்கியது. இளைஞர்களின் வருவாய் அவர்களை அறியாமலேயே வட்டியாகவும் தேவையற்ற வழிகளில் கொள்ளையடிக்கப்பட்டது.
 
பெரும்பான்மையான இளைஞர்கள்  கடனாளியாக வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்பட்டது. ஆம் வலை விரித்து இளைஞர்களின் சேமிப்பை உழைப்பை தன சுய சிந்தனையை இழந்து ஒரு மாய வாழ்க்கைக்கு வசியப்படுத்தப் பட்டார்கள்.
இளைஞர்களின் சிந்தனை செயல் முழுவதும் சம்பாதிப்பதும் கடனை அடைப்பதற்கும் தன மனைவி மக்கள் என்று குடும்பத்தைக் காக்கப் போராடுவதும் தான் ஏற்கனவே பழகிவிட்ட ஆடம்பர வாழ்க்கை வாழவும் செலவிடப்படுகிறது. தன் அன்றாடத் தேவை பிரச்சனைகள் சந்திக்கும்  பெரும்பான்மை இளைஞர்களால் சமூகம் பற்றி சிந்திக்கும் திறன் இல்லாத நிலையில் உள்ளார்கள்.
 
அனைவரும் உணர்கிறார்கள் ஆனால் தனக்காக ஒருவர் சென்றால் நல்லது என்ற எண்ணமே மேலோங்கியுள்ளது. தன்னுடைய வீட்டில் மின்தடை என்றால் கூட பக்கத்து வீட்டில் வசிப்பவர் புகார் செய்வார் நாம் நம் வேலையைப் பார்ப்போம் என்ற மனமே பெரும்பான்மையானவர்களுக்கு உள்ளது.
 
இந்தியன் குரல் உதவிமையத்தில் தகவல் பெரும் உரிமை சட்டம் மூலம் தங்களது தனிப்பட்ட பிரச்சனைகளான குடும்ப அட்டை பெற, பட்டா சிட்டா பெற, கல்விக்கடன் பெற, முத்யோர் ஓய்வூதியம் கைம்பெண்கள் மறுவாழ்வு திட்டம் படித்த பெண்களுக்கான உதவிகள் போன்ற அனைத்து பயன்களையும் பெற ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் மனுக்களை யாரிடம் அளிக்க வேண்டும் புகார்களை யாரிடம் எப்படித் தரவேண்டும் அலுவலக நடைமுறைகள் என்ன அரசின் நலத்திட்டன்களைப் பெறுவது எப்படி இலஞ்சம் கொடுக்காமல் அரசு திட்டங்களைப் பெறுவது எப்படி என்று தமிழகம் முழுவதும் பயிற்சி அளித்து வருகிறோம் இதற்க்கு கட்டமாம் எதுவும் நாங்கள் வாங்குவதில்லை நன்கொடை பெறுவதில்லை இதை எங்கள் சந்தோசத்தோடு சேவையாக செய்துவருகிறோம் ஆனால் எங்கள் உதவி  மையங்களில் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு தேடி வருபவர்கள் அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க உதவுங்கள் நீங்கள் சொல்வது போல் செய்கிறோம் என்று முதலில் சொல்வதில் எங்களுக்கு இந்த பிரச்னையை தீர்த்துக் கொடுங்கள் என்று தான் கேட்கிறார்கள். அவர்களின் பிரச்சனை தீர்க்கக் கூட அவர்கள் போராட தயாரில்லாமல் யாராவது தீர்த்துக் கொடுத்தால் நல்லது என்ற எண்ணத்திலேயே உதவிகேட்டு வருகிறார்கள். இதுதான் எண்களின் அனுபவம்  நாங்கள் அவர்களிடம் பேசி உங்கள் பிரச்னைக்கு நீங்கள் தான் செயல்பட வேண்டும் என்று புரிய வைத்து உதவி சிக்கிம். இது தான் இன்றைய இளைஞர்களின் நிலை………………………………………தொடரும் 
 
என்ன நண்பர்களே உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்  மீண்டும் தொடரும் 
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s