www.babisan2013.com

வவுணதீவில் கிராமிய சிறுவர் கண்காணிப்பு குழுக்களுக்கான கருத்தரங்கு 

(சுரேந்திக்கா)   மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள கிராம மட்டத்திலான சிறுவர் கண்காணிப்பு குழுக்களுக்கான கருத்தரங்குடன் கூடிய கலந்துரையாடல் இன்று 5ம் திகதி மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

இக் கருத்தரங்கு சிறுவர் பாதுகாப்பு-இலங்கை  நிறுவனம் உதவியுடன் , மட்டக்களப்பு- மேற்கு வலயக் கல்வி திணைக்களம், மண்முனை மேற்கு பிரதேச செயலகம் போன்றவற்றின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ  கழகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன்போது பிரதேச செயலாளர் கருத்துத் தெரிவிக்கையில், இன்றைய காலகட்டத்தில் சிறுவர்களின் பாதுகாப்பு சிறுவர்கள் வாழும் சில குடும்பங்களிலே கேள்விக்குறியாகவுள்ளது. கிராமிய கண்காணிப்புக் குழுக்கள் இவ் விடயத்தில் மிக மிக தியாக மனப்பான்மையுடன் சேவைசெய்யவேன்டும் என்பதனையும் இப் பயிற்சிக் கலந்துரையாடல் இதற்கு ஒத்தாசையாக இருக்கும். எனும் விடயங்கள் பற்றி கூறினார்.

இந் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, நன்னடத்தை உத்தியோகத்தர் எம்.வரதராஜன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் T.பிரதாபன் மற்றும் வை.எம்.சீ.ஏ  உத்தியோகத்தர் போன்றோர் கலந்து கொண்டு பயிற்சி கலந்துரையாடலினை நடாத்தினர்.

இதன்போது கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் கண்காணிப்பு குழுக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். Me-1Me-2

Me-3


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s